கூடுதல் கண்காணிப்பாளர் பழனிக்குமார் தலைமையில் சாலை பாதுகாப்பு வார விழா...
தேனி மாவட்ட காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா (04.02.2019 - 10.02.2019) கடைபிடிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் துறையினர் தேனி பங்களா மேடு பகுதியில் இருந்து அன்னஞ்சிவிலக்கு பகுதி வரை இரு சக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்தவாறு விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். முன்னதாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிதல் மற்றும் இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்வோர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிதல் மற்றும் வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்து செல்தல் , சாலை விதிகளை மதித்தல்,உள்ளிட்ட விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. காவலர்களது சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் .வீ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பழனிக்குமார், காவல் துறை துணை கண்காணிப்பாளர் முத்துராஜ் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள்,சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவல் துறை ஆளிநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
செல்வம்...


Comments (0)
Facebook Comments (0)