டேவிட்சன் தேவாசிர்வாதம் , இ.கா.ப., சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்...

டேவிட்சன் தேவாசிர்வாதம் , இ.கா.ப.,  சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்...

கோவை மாநகரக் காவல் ஆணையர் / கூடுதல் காவல்துறை தலைவர்  செள.டேவிட்சன் தேவாசிர்வாதம் ,இ.கா.ப., நடந்து முடிந்த 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவில் தேர்தலுக்கு முன்பும் , வாக்குப்பதிவு நாளன்றும் கோவை மாநகரில் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறா வகையில் மிகச்சிறப்பாக பாதுகாப்பு பணி,நுண்ணறிவு பணி,போக்குவரத்து பணி மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கினார்.

மேலும் கோவை மாநகரில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு ,போக்குவரத்து ,நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்ற காவல் ஆணையர் / கூடுதல் காவல்துறை தலைவர்  செள.டேவிட்சன் தேவாசிர்வாதம் ,இ.கா.ப., அறிவுறுத்தினார்.