நெல்லை மாநகர காவல்துறையினரின் மனிதநேய செயல்...

 நெல்லை மாநகர காவல்துறையினரின் மனிதநேய செயல்...

திருநங்கைகளுக்கு மறுவாழ்வு பயிற்சி விழா
 நெல்லை மாநகர காவல்துறையினரின் மனிதநேய செயல்...

நெல்லை மாநகர ரோடுகளிலும்...மாநகர பேருந்து நிலையங்களில் ஆதரவற்று சுற்றி திரியும் திருநங்கைளின் அவல நிலை வேதனைக்குரியது... 

ஆண், பெண், என இரு பாலினத்தவராலும் வெறுத்து ஒதுக்கப்படும் இவர்களுக்கு அத்தனை சுலபமாக வேலை வாய்ப்புக்களும் கிடைத்து விடுவதில்லை.. தங்கள் வயிற்று பிழைப்புக்காக பேருந்து நிலையங்களில் உதவி கேட்டு அலைவதும்.. சிலர் வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடும் அவல நிலைகளும் ஏற்ப்பட்டு விடுகிறது..

நெல்லை  மாநகரில்  வாழும்  அனைத்து திருநங்கைகளின் வாழ்வு மேம்பட நெல்லை மாநகர துணை ஆணையர் சரவணன் ஆலோசனையில் , உதவி ஆணையர் சேகர் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு பிரிவு) திருநங்கைகளுக்காக  மிக சிறப்பாக திட்டங்களை வகுத்து... 

இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் திட்ட பிரிவில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தையல் தொழில்  பயிற்சி 3 மாதங்களிலுக்கு அளித்து பின் வேலை வாய்ப்பிற்கும் வழி வகைகள் எடுத்து கூறப்பட்டது..  

விழாவில் நெல்லை  மாவட்ட ஆட்சியர்  ஷில்பா பிரபாகர் IAS , காவல் துணை ஆணையர் சரவணன் , உதவி ஆணையர் சேகர் ஆகியோர் கலந்து கொண்டு திருநங்கைகளின் வாழ்வு மேம்பட ஆலோசனைகளை வழங்கினர்,

விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் சேகர்,  (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு பிரிவு, )புராஜெக்ட் ஆபிஸர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ , உதவி திட்ட அலுவலர் ராமன் , உதவி திட்ட அலுவலர்கள் முருகன் மற்றும் வெள்ள பாண்டி சமூக ஆர்வலர்  சுந்தரகனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.