அதிரடியாக களம் இறங்கிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

சித்தரவதை செய்யப்பட்ட பெண்
கதறி அழுத குழந்தைகள்

அதிரடியாக களம் இறங்கிய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...


 
நெல்லை மாவட்டம் சம்பன்குளத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் அவருடைய உறவினரால் தகாத வார்த்தைகளால் பேசப்பட்டு, தாக்கப்படும் வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

தன் கணவரை தேடி மாமானார் வீட்டிற்கு சென்ற அந்த பெண் தாக்கப்படுவதும்... அருகில் அவருடைய பெண் குழந்தைகள்  கதறி அழுவதும் காண்போரை கண்கலங்க செய்தது.. குருர மனதுடன் நடந்து கொண்ட அந்த மனிதரை கைது செய்ய வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்தன,

இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் *ஓம் பிரகாஷ் மீனா IPS* கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

அதிரடியாக களம் இறங்கிய காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில்  நடவடிக்கை எடுக்கப்பட்டு 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்,

தன் விரைவான நடவடிக்கைகள் மூலம் குற்றவாளியை கைது செய்த நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் *ஓம் பிரகாஷ் மீனா IPS* ..க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.