கொரானாதடுப்பு நடவடிக்கைகள் அசத்திய ஆய்வாளர்சாகுல்ஹமீது
*இந்தியா* *என் தாய்நாடு*
*இந்தியர்* *யாவரும் என்* *உடன்பிறந்தோர்*
*கொரானா* தடுப்பு நடவடிக்கைகள்
* *அசத்திய ஆய்வாளர்* *சாகுல்ஹமீது*
பசியால் தவித்த 60 வட இந்திய தொழிலாளர்கள் கருணையுடன் காப்பாற்றிய ஆய்வாளர் சாகுல் ஹமீது
கொரானா வைரஸ்..ன் பாதிப்பு , தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்
மத்திய அரசு பிறப்பித்துள்ள 144 தடை உத்தரவால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போன நிலையில்.. அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியதால்..
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணறு பகுதியில் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல்...பசியால் தவித்து வந்த 60 வட இந்திய தொழிலாளர்களுக்கு இன்று பணகுடி காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது கருணையுடன் உதவி செய்து உள்ளார்
வட இந்திய தொழிலாளர்களுக்கு.. ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணைய் , சர்க்கரை, மைதா.. தேயிலை, காபி பவுடர்.. மளிகை பொருட்கள், வழங்கப்பட்டன...
மேலும் தொழிலாளர்களுக்கு கொரொனா தொற்று பரவாமல் இருக்க முக கவசங்கள், கிருமி நாசினி வழங்கப்பட்டது..



தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே பம்பரமாய் சுழன்று வரும் ஆய்வாளர் சாகுல் ஹமீது.. பொது மக்களிடையே கொரானா தொற்று குறித்த விழிப்புணர்வை சிறந்த முறையில் ஏற்படுத்தி வருகிறார்..ஆதரவற்ற நிலையில் ரோட்டில் அலைந்து திரிபவர்களுக்கும், உணவின்றி தவிக்கும் முதியவர்களை பராமரித்தும்... கருணை உள்ளத்துடன் உணவு , மற்றும் முக கவசங்கள் வழங்கி வருகிறார்.. தனது காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட கிராமங்களிலும் ஏழை எளிய மக்களை தேடி சென்று உணவு.. மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது,


அவசர நிலை காலங்களில் சிறந்த முன்னுதாரனமாக செயல்பட்டு..மொழி தெரியாமலும் .. உணவின்றியும் தவித்த வட இந்திய தொழிலாளர்களுக்கு மனித நேயத்துடன் உதவிய பணகுடி ஆய்வாளர் சாகுல் ஹமீது..க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது


Comments (0)
Facebook Comments (0)