கஞ்சா  விழிப்புணர்வு குறித்து கோவை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் டி.ஐ.ஜி.முத்துசாமி இ.கா.ப இன்று மாணவர்களுடன் உரையாற்றினார்...

கஞ்சா  விழிப்புணர்வு குறித்து கோவை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் டி.ஐ.ஜி.முத்துசாமி இ.கா.ப இன்று மாணவர்களுடன் உரையாற்றினார்...

உடுமலையில் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் கஞ்சா  விழிப்புணர்வு குறித்து கோவை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் டி.ஐ.ஜி.முத்துசாமி இ.கா.ப இன்று மாணவர்களுடன் உரையாற்றினார்.அப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயண்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வலியுறுத்தினார்,இந்நிகழ்வில் உடுமலை டி.எஸ்.பி தேன்மொழிவேல் , உடுமலை காவல் ஆய்வாளர் ராஜ கண்ணன், தளி காவல் ஆய்வாளர் ராஜேஸ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் உடுமலைப்பேட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட தளி காவல் வட்ட அலுவலகத்தில்   ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தளி காவல் வட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்ற வழக்கு கோப்புகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்காத வழக்குகளை கண்டுபிடிக்குமாறும், நிலுவையில் உள்ள நீண்ட கால வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இரவு ரோந்துகளை முறையாக செய்து குற்றங்களை தடுக்குமாறும், மனு விசாரணை செம்மையாக செய்ய வேண்டும் என்றும், மனுதாரர்களிடமும், பொதுமக்களிடமும் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு கோவை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் டி.ஐ.ஜி.முத்துசாமி இ.கா.ப  அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.

சைபுர்ரகுமான்,உடுமலைப்பேட்டை.