தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக சுதந்திர திருவிழா அமுதப் பெருவிழா பேரணி நடைப்பெற்றது...
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி ‘சுதந்திர திருவிழா அமுதப் பெருவிழா” கொண்டாட்டமாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் தேசிய கொடி ஏந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் . எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி ‘சுதந்திர திருவிழா அமுதப்பெருவிழா” கொண்டாடுவதையடுத்து (13.08.2022) காவல்துறையினர் தேசிய கொடி ஏந்தி தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கலைக் கல்லூரி முன்பிருந்து பேரணியாக புறப்பட்டு குரூஸ்பர்னாந்து சிலை வந்தடைந்து நிறைவு செய்தனர். இந்தப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், இந்த ஆண்டு நமது நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். இந்த சுதந்திரம் நம்மை நாமே ஆள்வதற்காக கிடைக்கப்பட்டது. நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்காக பல தலைவர்கள் உட்பட பல்வேறு மக்கள் சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களை நினைவுகூறும் வகையிலும், எல்லோருடைய மனதிலும் முன் நிறுத்துவதற்காகவும் இந்த 75வது சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பேரணி திருவிழா தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் கல்லூரியிலிருந்து புறப்பட்டு குருஸ்பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைகிறது என கூறி தனது சிறப்புரையை நிறைவு செய்து பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணிக்கு தலைமை வகித்தார்.

இந்த விழாவிற்கு தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர். சத்தியராஜ், தூத்துக்குடி ஆயுதப்படை காவல் ஆய்வாளர். சுடலைமுத்து, போக்குவரத்து காவல் ஆய்வாளர். மயிலேறும் பெருமாள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர். அய்யப்பன், வடபாகம் காவல் ஆய்வாளர். ரபி சுஜின் ஜோஸ், முத்தையாபுரம் காவல் ஆய்வாளர். ஜெயசீலன், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர். வனிதா உட்பட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
சூர்யா , சிறப்பு செய்தியாளர்.


Comments (0)
Facebook Comments (0)