நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார்...
நெல்லையில் 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி பிரபல திரையரங்கமான ராம் சினிமாஸ் மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சதிஷ்குமார் முன்னிலையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநகர காவல் துணை ஆணையர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார்.மாநகர காவல் துணை ஆணையர் முன்பு ஏராளமான ரசிகர்கள் வாக்களிப்பது நமது கடமை,100 % வாக்களிப்போம்... என உறுதி மொழி ஏற்று கொண்டனர்.
100% வாக்குப்பதிவை வலியுருத்தி பொதுமக்களை கவரும் வகையில் நாட்டு மேளம், கரகம், சிலம்பாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.. பின்னர் ராம் சினிமாஸ் முதல் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் வரை வாக்காளர் விழிப்புணர்வு பேரணி காவல் துணை ஆணையர் தலைமையில் நடைபெற்றது.
பேரணியில் நடைபெற்ற கரகாட்டம், சிலம்பாட்டம் போன்றவை பார்வையாளர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது.விழா ஏற்பாடுகளை ராம் சினிமாஸ் உரிமையாளர் ராமசாமி ராஜா, நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Comments (0)
Facebook Comments (0)