தேனி மாவட்டத்தில் குறைகள் தீர்ப்பு முகாம்.
தேனி மாவட்டம் போடி உட்கோட்டத்திற்க்கு உட்பட்ட போடி தாலுகா காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைக்கும் விதமாக பொதுமக்களின் புகார் குறித்து நேரடியாக சென்று காவல்துறையினர் மனுக்களை பெற்று போடிதாலுகா காவல் ஆய்வாளர் தர்மர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் 50 க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டு புகாரின் பேரில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு உறுதியளிக்கப்பட்டது.


Comments (0)
Facebook Comments (0)