ஆயுதப்படை காவலர் 30 மணி நேரம் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை முயற்சி...
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை சிறப்பிக்கும் வண்ணத்தில் மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் முதல் சாதனையாக திருச்சி ஆயுதப்படை காவலர் அரவிந்த் மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜவகர் இருவரும் இணைந்து பிப்ரவரி மாதம் 1 ம் தேதி காலை 07:07 மணிக்கு தொடங்கி முதல் மறுநாள் மதியம் 15:50 மணி வரை தொடர்ச்சியாக 30 மணி நேரம் 30 நிமிடம் 30 வினாடி சிலம்பம் சுற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.
உலகசாதனை விதிமுறைப்படி ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிடங்கள் ஓய்வு உண்டு.மொத்தத்தில் 2 மணி நேரம் ஓய்வு எடுத்து உள்ளனர்
இந்த சாதனைகள் அனைத்தும் கின்னஸ் சாதனை புத்தகம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகங்களுக்கு பதிவுசெய்து அனுப்பப்பட்டுள்ளது.
ஜெட்லி உலக சாதனை புத்தகத்தில் ஜெட்லி அவர்கள் நேரில் ஆய்வு செய்து சாதனைச் சான்றிதழ் வழங்கினார்.


Comments (0)
Facebook Comments (0)