திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் பனை விதை நடவு திருவிழா ...
முகநூல் நண்பர்கள் குழு மற்றும் வி .எம் சத்திரம் டெவலப்மன்ட் டிரஸ்ட் சார்பில் இன்று காலை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பனை விதை நடவு திருவிழா இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்டகாவல்கண்காணிப்பாளர் N.மணிவண்ணன்ஐ.பி.எஸ் அவர்கள் பனை விதை நடவு பணியை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து வளாகம் முழுவதும் 50 பனை விதைகள் நடப்பட்டது. இதில் முகநூல் நண்பர்கள் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் மற்றும் முகநூல் நண்பர்கள் கல்லூர் வெங்கடேசன் நெல்லை சிராஜ் பேட்டை செல்வகணேஷ் மற்றும் விஎம் சத்திரம் டெவலப்மெண்ட் டிரஸ்ட் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Comments (0)
Facebook Comments (0)