நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் அவர்கள் ஆதரவற்றோருக்கு மதிய உணவு வழங்கி பொங்கல் விழா கொண்டாடினார்...
நீலகிரி மாவட்டம் ஊட்டி முள்ளிக்கொரை அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பரிமாறி சமத்துவ பொங்கல் கொண்டாடினார். நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
வருகின்ற 2023 தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து அமைப்புகள் மற்றும் சமூகசேவை மையங்கள் என பல்வேறு இடங்களிலும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது .

இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிக் கொரை பகுதியில் இருக்கும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் இன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மு. பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்.

தொடர்ந்து ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு பரிமாறி பொங்கல் விழாவை சிறப்பித்தார்.இந்நிகழ்ச்சியில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சம்பத்,நீலகிரி.


Comments (0)
Facebook Comments (0)