வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவையொட்டி, சென்னை பெருநகரில் காவல் துறை சார்பில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

  ​​கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு இன்றைய தினம் (25.4.2021) முழு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகள், தெருக்கள் மற்றும் சந்திப்புகளில் தற்காலிக காவல் சோதனைச் சாவடிகள் மற்றும் தடுப்புகள் அமைத்து, காவல் அதிகாரிகள் தலைமையில் சுமார் 200 இடங்களில் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய தேவையான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் விநியோகம் மற்றும் அவசர ஊர்திகள் தவிர வேறு எந்த வாகனங்களும் கடைகளும் அனுமதிக்காததால், காவல் அதிகாரிகள் தலைமையில், தங்களது காவல் நிலைய எல்லைக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கண்காணித்து வருகின்றனர்.

 

காவல் ஆணையாளர் ஆய்வு

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் இன்று (25.4.2021) காலை, சென்னை பெருநகரில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு, அமைந்தகரை, அண்ணா வளைவு அருகில் உள்ள தற்காலிக வாகன சோதனைச் சாவடியில், காவல்துறையினரின் பணிகள் மற்றும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாகனத் தணிக்கையில் ஈடுபடும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முகக்கவசம், கையுறைகள் அணிந்தும், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் சமூக இடைவெளியை கடைபிடித்தும், விசாரணை மேற்கொள்ளும்படியும் அவ்வப்போது திரவ சுத்திகரிப்பானை பயன்படுத்தவும், காவல் ஆணையாளர் அறிவுறுத்தினார்.

இன்றைய முழு ஊரடங்கில் சுமார் 7,000 காவல்துறையினர் சென்னை முழுவதிலும் பாதுகாப்பில்ஈடுபட்டுள்ள நிலையில், திருமணம், இறப்பு சார்ந்தநிகழ்ச்சிகளுக்கு செல்வோரிடம் உரிய ஆவணங்களைசரிபார்த்த பின் அவர்களுக்கு செல்ல அனுமதிஅளிக்கப்படுகிறது. இதுவரை 60 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

காவல் நிலையங்களில் ஆய்வு 

மேலும், F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் K-4 அண்ணாநகர் காவல் நிலையங்களுக்கு காவல் ஆணையாளர் நேரில் சென்று அங்கு கொரோனா வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றப்படுகின்றனவாஎனவும் பார்வையிட்டு, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். மேலும், கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு, காவல் நிலையங்களின் வெளிப்புறங்களில் பந்தல் அமைத்து பொதுமக்களின் புகார்களை பெற்று விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையாளர் தெரிவித்தார். 

 

சென்னை பெருநகர காவல்துறையில் கொரோனா பாதிப்பு

சென்னை பெருநகர காவல்துறையில், இதுவரை3,609 காவல் துறையினர் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு, 3,338 காவல் துறையினர் மருத்துவசிகிச்சை முடித்து நல்ல நிலையில் வீடு திரும்பியுள்ளனர். தற்சமயம் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த 258 காவல்துறையினரில் சிலர் மருத்துவமனைகளிலும், சிலர் கொரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தங்களது இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை முதல் அலை மற்றும் இரண்டாம்அலையை சேர்த்து சென்னை காவல்துறையில் 7 நபர்கள்மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதும், 6 நபர்கள்சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பின்னரும் என மொத்தம் 13 நபர்கள் இறந்துள்ளனர்.

முதல் அலையில் இறந்த காவல் துறையினர்குடும்பங்களுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலையில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு உள்ளது. 

இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (வடக்கு) திரு.டி.செந்தில்குமார், இ.கா.ப., இணை ஆணையாளர்கள் திரு.கே.எழிலரசன், இ.கா.ப., (போக்குவரத்து/வடக்கு), திருமதி.எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப,. (மேற்கு மண்டலம்), துணை ஆணையாளர்கள் திரு.ஜி.ஜவஹர், இ.கா.ப., (அண்ணாநகர்), திரு.எம்.எம்.அசோக் குமார் (போக்குவரத்து/மேற்கு) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.