நெல்லையின்  சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது  ...

நெல்லையின்  சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது  ...

நெல்லையின்  சிறந்த காவல் நிலையங்களுக்கு விருது  ...

மாநகர காவல்துறை ஆணையர் தீபக் M. டாமோர் IPS வழங்கினார்,

ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவிலும்.. தமிழக அளவிலும்.. சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.

இப்போட்டிகளில் நெல்லை மாநகர காவல் நிலையங்களை தேர்வில் கலந்து கொள்ள தயார் செய்யும் வகையிலும்.. காவல் நிலையங்களை மேம்படுத்தும் வகையிலும், நெல்லை மாநகர காவல் துறையால் சிறந்த காவல் நிலைய  தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.

காவல் நிலையங்களின் தோற்றம்.. காவல் நிலைய வளாக பராமரிப்பு, வரவேற்பு பகுதி, சுத்தமான பராமரிப்பு, அறிவிப்பு பலகை, ஆவணங்களின் பராமரிப்பு, பொதுமக்களிடம் காவலர்கள் அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்றது .

நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் M. டாமோர் காவல் நிலையங்களை நேரில் பார்வையிட்டு மதிப்பெண்கள் வழங்கி தேர்வு செய்தார்

2020..ம். ஆண்டுக்கான சிறந்த காவல்நிலையமாக நெல்லை டவுண் காவல் நிலையம் முதலிடமும், பெருமாள்புரம் காவல் நிலையம் இரண்டாவது இடமும் பிடித்தன..

முதலிடம் பிடித்த நெல்லை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஸ்வரி.. இரண்டாம் இடம் பிடித்த பெருமாள்புரம் காவல் நிலைய ஆய்வாளர் செழியன் மற்றும் டவுன் காவல் நிலைய  உதவி ஆய்வாளர் மகாலெட்சுமி ஆகியோருக்கு மாநகர காவல்  ஆணையர் விருதுகள் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர்கள் மகேஷ்குமார், சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு விருது பெற்ற காவல் நிலையங்களின்  ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள், மற்றும் காவலர்களை பாராட்டினர்.