கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தேசிய நெடுஞ்சாலை இருபுறம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த முட்புதர்களை சுத்தம் செய்தனர்...

கம்பம் போக்குவரத்து  காவல் ஆய்வாளர்  தேசிய நெடுஞ்சாலை இருபுறம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்த முட்புதர்களை சுத்தம் செய்தனர்...

தேனி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS அவர்களின் அதிரடி உத்தரவின் பெயரில் கம்பம் போக்குவரத்து  காவல் ஆய்வாளர் செந்தாமரைக்கண்ணன், சார்பு ஆய்வாளர் நேரு தலைமையிலான காவலர் துறையினர்  திண்டுக்கல் To கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையின்  ஓரங்களின் இருபுறமும் முளைத்துள்ள  முட்செடிகள், விஷச்செடிகள்  

சாலையில் வைத்துள்ள ஒளிரும் ஜமிக்கை விளக்குகள்,ரிப்லைட் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து முளைத்துள்ளதை செடிகளை போக்குவரத்து காவல்துறையினர் சாலையில் இருபுறமும் தாங்க ளே களத்தில் இறங்கி மண்வெட்டி, அருவாள் போன்றவற்றைக் கொண்டு  அகற்றினார்கள் தற்போது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் தினசரி 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வாகனங்கள்  தினசரி இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது கம்பம் போக்குவரத்து காவல்துறையினரின் இப்பணியை வாகன ஓட்டிகள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே IPS, உத்தமபாளையம் உட்கோட்ட துணைக்கண்காணிப்பாளர் மதுகுமாரி IPS ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
செல்வம்,தேனி.