‘‘லாக்அப்பை திறந்து அக்யூஸ்டுகளை வெளியே விட்டுருப்பா’’ – உத்தரவு போட்ட துணை காக்கி
செல்போன் வழிப்பறி கொள்ளையர்களை கடந்த வாரம் தனிப்படை போலீசார் மிகவும் கஷ்டப்பட்டு அள்ளிக் கொண்டு வந்து நள்ளிரவில் பிடித்து லாக்அப்பில் அடைத்தார்களாம். அதுகுறித்து சந்தோஷத்துடன் சரக துணை காக்கிக்கு தனிப்படை தகவல் கொடுக்க, பாராட்டுவார் என்று எதிர்பார்த்த தனிப்படைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ‘நைட் நேரத்தில் எதுக்குய்யா கூட்டிட்டு வந்தீங்க. லாக்அப்பை திறந்து அனுப்பி விட்டுறுங்க, சொன்னதை செய்யுங்க, எல்லாத்தையும் காலைல பாத்துக்கலாம்’ என கத்தினாராம். குழம்பிப்போன காக்கிகள் அது குறித்து இணை காக்கியிடம் கேட்க டென்ஷனான அவர் துணை காக்கியை ‘நீ என்ன லுாசா’, எனசெம கடிகடித்து விட்டாராம். இந்த கூத்து வேறு எங்கேயும் இல்லை, சென்னையில் சிவன்கோவில் அமைந்துள்ள மகாபலமான நகரில்தானாம்.


Comments (0)
Facebook Comments (0)