பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்...

கணினிக் குற்றங்கள் பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. கணினிக் குற்றங்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக குற்றம் புரிபவர்கள், குற்றம் புரிபவர்கள் பயன்படுத்தும் கருவிகள், பாதிக்கப்படுபவர்கள் போன்றவை. இங்கே கீழே கொடுக்கப்பட்டவை குற்றத்தினை எப்படித் தடுக்கலாம் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.

1.பருநிலை பாதுகாப்பின் அத்துமீறல் (Physical Security breach)
2.தனி நபர் பாதுகாப்பின் அத்துமீறல் (Personal Security breach)
3.தகவல்தொடர்பு மற்றும் தரவு பாதுகாப்பின் அத்துமீறல்
4.நடவடிக்கை பாதுகாப்பின் அத்துமீறல் (Operational security breach)
ஆகிய பல்வேறு குற்றங்களை,திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., மற்றும்  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.சரவணசுந்தர் இ.கா.ப ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.ச. மணி அவர்கள் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட சைபர்கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.சுப்ரமணி அவர்கள் ஆலோசனையின்படி  08.10.2021-ம்தேதி குன்னம் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சைபர் க்ரைம் குற்றங்கள், அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. 


      இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் S.மனோஜ்  அவர்கள் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சமூக வலைதளங்களை பயன்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகமல் இருப்பது, இணையவழி மூலம் பணத்தை இழந்தால் 155260 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு வங்கி பரிவர்த்தனை விவரங்களை தெரிவித்தால் உங்கள் பணம் திரும்பப் பெற்று தரப்படும் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
        இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவிகள்  கலந்து கொண்டனர்.

விஜயகுமார் , நிருபர்