துணை ஆணையர் ஸ்வாமிநாதன் தலைமையில்போக்குவரத்து விழிப்புணர்வு...
சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ. கே விஸ்வநாதன் அவர்களின் உத்தரவின் பெயரில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை கூடுதல் ஆணையர் திரு அருண் அவர்களின் மேற்பார்வையில் போக்குவரத்து இணை ஆணையர்கள் திரு எழிலரசன் மற்றும் திருமதி ஜெயகௌரி அவர்களின் வழி காட்டுதலின் படி நகரில் பல இடங்களில் பொது மக்கள் மற்றும் பலதரப்பட்ட வாகனஓட்டிகள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி தங்களால் இயன்றவரை பொது மக்களிடையே போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை போக்குவரத்து காவல் துறை சார்பாக அண்ணாநகர் பகுதியில் உள்ள அண்ணா வளைவு சந்திப்பில் கனரக வாகன ஓட்டிகள் பள்ளி வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோ போன்ற வாகன ஓட்டிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு தற்போது சென்னை மேற்கு மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக பொறுப்பு வகிக்கும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை துணை ஆணையர் ஸ்வாமிநாதன் அவர்கள் தலைமை ஏற்று வாகன ஓட்டிகளிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் சென்னையில் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இன்று வரை சுமார் 1170 பேர் பல்வேறு விபத்துகளால் இறந்துள்ளனர். பெரும்பாலான விபத்துக்களுக்கு இரு சக்கர வாகன ஓட்டிகளும் நடைபாதையினர்களால் மட்டுமே ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். பொது பயனாளிகளை ஏற்றி செல்லும் ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் காரணம் தனிப்பட்ட முறையில் வாகன ஒட்டிக்கு விபத்து ஏற்பட்டால் அது அந்த வாகன ஓட்டியை மட்டுமே பாதிக்கும் என்றும் பொது வாகன ஓட்டிகள் ஏற்படுத்தும் விபத்துகளினால் ஏற்படும் பாதிப்பு பல குடும்பத்தை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக விபத்தில் தனது இரு கால்களையும் சேதப்படுத்திக்கொண்ட சாம் அவர்கள் தனக்கு ஏற்பட்ட விபத்தின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியில் முன்னுரையாக அண்ணாநகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சக்திவேல் அவர்களும் நன்றி உரைக்காக சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சுரேந்தர்நாத் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவர்க்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியினை முடித்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கனரக வாகன ஓட்டிகள் பள்ளி வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஷேர் ஆட்டோ போன்ற பொது வாகன ஓட்டிகள் என சுமார் 100 பேர் பங்கேற்று பயன் பெற்றனர்.


Comments (0)
Facebook Comments (0)