சேலம் மாநகர வடக்கு சரக உதவி ஆணையாளர்எஸ்.அனந்தகுமார் தலைமையில் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது...
வீராணம் காவல் நிலைய சரகம் பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி இலக்கியா வயது 34 என்பவர் தனது கணவர் கண்ணன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 27.5.2021ம் தேதி இறந்து விட்டதாகவும் தன்னுடைய இரண்டு மகள்கள் படிப்புக்காக தன்னால் செலவு செய்ய இயலவில்லை என்று கூறினார். அதனால் சேலம் மாநகர வடக்கு சரக உதவி ஆணையாளர்எஸ்.அனந்தகுமார் அவர்கள் இலக்கியாவின் மகள்கள் ரெனி 9 மற்றும் ஹெய்லி 8 ஆகிய இருவரும் சேலம் அக்ரஹாரம் மான்போர்ட் பள்ளியில் நான்காம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு படிப்பதற்கு அவர்களுக்கு ஒரு வருட படிப்பு செலவிற்காக 20 ஆயிரம் ரூபாய் சேலம் மாநகர காவல்துறை சார்பாக வழங்கினார்.
ரஜாக்கான் , மாவட்ட நிருபர்...



Comments (0)
Facebook Comments (0)