காவலர்களை ஊக்கப்படுத்தி வரும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…

காவலர்களை ஊக்கப்படுத்தி வரும் அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்…

மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில்  அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்*

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு முதல் இரண்டு பரிசுகளும்  காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு  இரண்டு பரிசுகளும் மாதந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவித்தார்கள். அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தூய்மையான  பராமரிப்பிற்காக 26/08/2021 நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கான   முதல் பரிசாக பண்டக பிரிவிற்கு சுழல் கோப்பையும் 2000 ரூபாய் பரிசும், இரண்டாவது பரிசாக "பி" (சம்பளபிரிவு)பிரிவுக்கு ரூபாய் 1000 மற்றும்  சுழல் கோப்பையும்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார்.  பிற பிரிவுகளில் முதல் பரிசாக 2000 ரூபாய் மற்றும் சூழல் கோப்பையை சிறுவர் குற்ற தடுப்பு பிரிவுக்கும், 2 -வது பரிசாக 1000/- ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை மாவட்ட குற்றப்பிரிவுக்கும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .K. பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள்  வழங்கினார்கள்.  விஜயகுமார்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்), காவல் ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

இதற்கு முன்பு சிறப்பாக செயல்படும் காவல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் ஊக்கப்படுத்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

விஜயகுமார் , மாவட்டநிருபர்.