போடி DSP .ஈஸ்வரன் தலைமையில் சுமார் 25 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பிடிப்பட்டது...
தேனி மாவட்டம் போடி உட்கோட்ட பகுதியான ராமக்கிருஷ்ணாபுரபுரத்தில் CMR கணேஷன் என்பவருக்கு சொந்தமான குடோனில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் பான்மசாலா போன்றவற்றை விற்பனைக்காக பதுக்கி வைத்துள்ளதை ரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்த போடி DSP .ஈஸ்வரன் தலைமையில், போடி தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் திரு.தர்மராஜ் உதவியுடன் பதுக்கி வைத்த புகையிலை பொருட்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியினையும் பறிமுதல் செய்தார்கள், இதன் மதிப்பு சுமார் 25 லட்சம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது . தீவிர விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள பிடிப்பட்ட புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரி தாலுகா காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது . இந்த தேடுதல் வேட்டையில் சார்பு ஆய்வாளர்கள் செல்வராஜ், பாண்டியராஜ் ,சிறப்பு சார்பு ஆய்வாளர் பிரகதீஸ்வரன் காவலர் அருணகிரி மற்றும் காவலர்கள் இருந்தார்கள். இந்த சிறப்பு பணியினை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் வெகுவாக பாராட்டினார்.


Comments (0)
Facebook Comments (0)