ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை காப்பாற்றிய பெண்மணியை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்...

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவர்களை காப்பாற்றிய பெண்மணியை நேரில் அழைத்து பாராட்டிய மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்...

தஞ்சை மாவட்டம் , பாபநாசம் தாலுகா , அலவந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் 13.01.2022 அன்று மாலை கபிஸ்தலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கங்காதரபுரம் , காவேரி ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர் . அப்போது அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த  சரோஜா ,  என்பவர் தனது புடவையை அவிழ்த்து வீசி 13 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்களை காப்பாற்றினார் .  14 வயது மதிக்கத்தக்க மற்றொரு சிறுவனின் உடல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மறுநாள் ( 14.01.2022 ) காலை சுவாமிமலை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட அம்பி அய்யர் தோட்டத்திற்கு அருகில் உள்ள படுகையில் கண்டு எடுக்கப்பட்டது .  ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இரண்டு நபர்களை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சரோஜா  வீரதீரச் செயலை பாராட்டும் வகையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர்  வே.பாலகிருஷ்ணன் , இ.கா.ப. ,  நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .

Reporter , JPR.