மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் தலைமையில் மினி மாரத்தான் போட்டி...

மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வி. பாஸ்கரன் தலைமையில் மினி மாரத்தான் போட்டி...

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தை போற்றும் வகையில் காவல்துறை சார்பில் இந்த வாரம் நீத்தார் நினைவு தின வாரமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பணியின்போது இறந்த காவல்துறை அதிகாரிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதேபோல் மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்                  வி. பாஸ்கரன் அவர்கள் உத்தரவு படி  ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது. 

 அதில் ஒரு நிகழ்வாக காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி நடத்த  23.10.21 ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இப் போட்டியானது மதுரை மாவட்ட காவல் அலுவலகத்திலிருந்து தொடங்கப்பட்டு அப்பன்திருப்பதி காவல்நிலையம் வரை சுமார் 8 கிலோ மீட்டர்கள் நடைபெற்றது. இந்த மினி மாரத்தான் போட்டியினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்                     வி பாஸ்கரன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இந்த போட்டியில் சுமார் 150க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.

 மேலும் இந்நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் காட்வின் ஜெகதீஷ் குமார் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர்  விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இப்போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 3000 இரண்டாம் பரிசாக ரூபாய் 2000 மூன்றாம் பரிசாக ரூபாய் 1000 மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிறப்பித்தார்கள்.

Jpr, Editor