காவலர் நிறை வாழ்வு பயிற்சி முகாம்...

காவலர் நிறை வாழ்வு பயிற்சி முகாம்...

மகத்தான காவல் பணியில் ஈடுபட்டு நம்மை காக்கும்  காவலர்களுக்கு... பனிச்சுமை மற்றும் காவலர்களுக்கு  ஏற்படும் மன அழுத்தங்களை குறைத்து நல்வழிபடுத்தும் காவலர் நிறை வாழ்வு பயிற்சி முகாம் மணிமுத்தாறு 9வது மற்றும் 12  சிறப்பு  படை பிரிவு அணியினருக்கு நடைபெற்றது..

ஆய்வாளர் , உதவி ஆய்வாளர், தலைமையில் ஒரு மனநல மருத்துவரும் பங்கேற்கும் இந்த நிறை வாழ்வு பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தாக்க பயிற்சிகள் , மற்றும் மன நல மருத்துவரின் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது,
பயிற்சியில் பங்கேற்ற 45 பேருக்கு சான்றிதழ்கள் இன்று வழங்கப்பட்டது.

விழாவில் மணிமுத்தாறு துணை தளவாய் மணிவர்ணன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார், உதவி தளவாய் திருமதி தீபா , காவலர் நிறை வாழ்வு பயிற்சியின்  A  பிரிவின் தலைவர்..ஆய்வாளர், பாபுனி, உதவி ஆய்வாளர் மெர்சி, மனநல உதவி பேராசிரியர் Dr.ஸ்ரீநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கடந்த 70 வாரங்களாக இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.பயிற்சி காவலர்கள் அனைவரும் துணை தளவாய் மணிவர்ணன் முன்பு உறுதி மொழி எடுத்துகொண்டனர்.