வர தாமதித்த 108 ஆம்புலன்ஸ் சேவை தாமதமின்றி உயிரை காப்பாற்றிய ஆய்வாளர் ஆடிவேல்...
கடவுளின் நிறம் காக்கி தான்
அசத்தும் தமிழக காவல்துறையினர்
வர தாமதித்த 108 ஆம்புலன்ஸ் சேவை
தாமதமின்றி உயிரை காப்பாற்றிய ஆய்வாளர் ஆடிவேல்
தென்காசியில் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடிய பெண் ஒருவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108..க்கு பலமுறை அழைத்தும் , ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆன நிலையில்... தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல்..தனது காவல் வாகனத்தை அனுப்பி உயிரை காப்பாற்றிய சம்பவம் பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
உயிருக்கு போராடிய நிலையில் தாமதம் இல்லாமல் ஆய்வாளர் ஆடிவேல் செய்த உதவி இணையதளங்களில் வைரலாகி வருகிறது
144 தடை உத்தரவை மதித்து பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டில் இருக்கும் போது... அவர்களுக்கு சிறு பிரச்சனை எதுவும் வராமல் பாதுகாப்பது எங்கள் கடமை என குறிப்பிட்டுள்ள ஆய்வாளர் ஆடிவேல்..
தென்காசி நகர மக்கள் தங்களுக்கு ஏதேனும் அவசர... அத்தியாவசிய உதவிகள் தேவைப்பட்டால் தன்னை உடனே தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தது மட்டுமல்லாமல்..
தென்காசி நகர மக்கள் தங்களது உணவு மற்றும் மருத்துவங்களுக்கு ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 9498195575 என்ற தனது அலைபேசி எண்னுக்கு அழைக்குமாறும்.. 24 மணி நேரமும் உதவிகள் தர தயார் என பொது மக்களிடம் தெரிவித்து உள்ளார்
தமிழகம் முழுவதும் தங்களது அர்ப்பணிப்பான சேவையால் பொதுமக்களிடம் பெரும் பாராட்டுகளை தமிழக காவல் துறையினர் பெற்று வரும் வேளையில்... துரிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றி.. பாராட்டுக்குரிய செயலை செய்த ஆய்வாளர் ஆடிவேல் அவர்களை காவலர் வாய்ஸ் மகிழ்வுடன் வாழ்த்துகிறது.


Comments (0)
Facebook Comments (0)