உமராபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  நிர்மலா  தலைமையில் விழிப்புணர்வு...

உமராபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  நிர்மலா  தலைமையில் விழிப்புணர்வு...

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் உமராபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் பழங்களில் மாங்கொட்டைகளில்  நாட்டு வெடிகுண்டுகள் கலந்து விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது .

இதனை தவறுதலாக உண்ணும் கால்நடைகள் படுகாயமடைந்து உயிர் இழக்கும் சூழல் உருவாகிறது மேலும் இந்த இதுபோன்ற செயல்களால் மனிதர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர்  அறிவுறுத்தலின்படியும் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர்  வழிகாட்டுதலின்படியும் உமராபாத் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  நிர்மலா  தலைமையில் காவலர்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் நேரடியாக சென்று பொதுமக்களிடம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது, நாட்டு (கள்ள) துப்பாக்கிகள் வைத்திருப்பது, விலங்குகளை வேட்டையாடுவதற்காக வெடிகுண்டு வைப்பது, வெடிமருந்துகள் சட்ட விரோதமாக பதுக்கி வைப்பது, கஞ்சா, நாட்டு சாராயம், கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பது போன்ற செயல்கள் செய்வோரை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு இருப்பதை விளக்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியும் எச்சரிக்கை செய்தும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் இது போன்றவர்களை கண்டறிந்தால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் படியும் விழிப்புணர்வு பரப்புரை செய்தார்கள்...

சுரேஷ்குமார், செய்தியாளர்...