சென்னை போக்குவரத்து காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் இடையூறு செய்த CTS பெண் ஊழியர் மீது நடவடிக்கை பாயுமா?

இரவு வாகன தணிக்கையில் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த காரின் ஓட்டுநரை பரிசோதித்த போது , அந்த ஓட்டுநர் மது அருந்தி காரை ஓட்டியதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க காரை நிறுத்தி வைத்தனர். அப்போது அந்த காரில் பயணம் செய்த சி.டி.எஸ் பெண் ஊழியர் ஓட்டுநருக்கு சாதகமாக பேசி பணிசெய்த போக்குவரத்து அதிகாரியை ஒருமையில் பேசி இடையூறு செய்து உள்ளார். குடித்துவிட்டு அந்த ஓட்டுநர் காரை விபத்துக்குள்ளாக்கினாலோ, காரில் பயணம் செய்யும் பெண்ணிடம் குடிபோதையில் தகாத முறையில் நடந்து கொண்டாலோ பாதிப்படைவது அந்த பெண்மணி தான் என்று புரிந்து கொள்ளாமல் Shut up your mouth என்று பணி செய்த அதிகாரியை திட்டுகிறார் . இதற்கு ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சி.டி.எஸ் பெண் ஊழியர் மீது அந்த நிறுவனமும் மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாமே?