காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் நெல்லையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்...
கரொனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளில் சுற்றி திரிந்த மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் தன்னார்வலர்கள் மூலம் மீட்கப்பட்டு மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர்களுக்கு நெல்லை மாவட்ட அஜித்குமார் நற்பணி இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்கள் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
காவல் உதவி ஆணையர் சதீஷ் குமார் கலந்து கொண்டு உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அஜித் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் G.கண்ணன் சமூக ஆர்வலர் புல்லட் ராஜா, நிர்வாகிகள் ஈஸ்வர கண்ணன் ராம்கி, வெங்கட், நாகராஜ், குமார், ஸ்ரீகாந்த் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்தோணி சேவியர்
தலைமை நிருபர்...


Comments (0)
Facebook Comments (0)