நாட்டு நல திட்ட நிறைவு விழாவில் மாணவர்களை ஊக்கப் படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா...
அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசு தொழில்கல்வி மாணவர்களுக்கு 22.03.2022 முதல் 28.03.2022 வரை 7 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமின் நிறைவு நாளான 28.03.2022 நேற்று மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
K. பெரோஸ்கான் அப்துல்லா அவர்கள் கலந்துகொண்டு பசுமையை காக்கும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்கள்.

நாட்டுநலப்பணி திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மாணவ - மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்களை வழங்கி பாராட்டினார்கள். அரசு தொழில் கல்வி முதல்வர். நாகராஜன் அவர்கள், பயிற்சி அலுவலர்கள் தனபால், வீராஜக்கு, திட்ட அலுவலர் பழனியப்பன் மற்றும் தஞ்சாவூர் லயன்ஸ் கிளப் மண்டல தலைவர் முரளி அவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறைவு விழாவில் பங்கேற்றனர்.
நிருபர்,விஜயகுமார்.


Comments (0)
Facebook Comments (0)