மாறுவேடத்தில் ரெய்டுக்கு சென்ற எஸ்பி!

மாறுவேடத்தில் ரெய்டுக்கு சென்ற எஸ்பி!

மாறுவேடத்தில் ரெய்டுக்கு சென்ற எஸ்பி!

புதுக்கோட்டைக்கு எஸ்பியாக நியமிக்கப்பட்ட அருண் சக்திகுமார் லுங்கி, டீ ஷர்ட் சகிதம் டாஸ்மாக் சரக்கு வேட்டைக்கு பதவியேற்ற சில நாட்களில் புதுக்கோட்டை பகுதியில் டாஸ்மாக் சரக்கு கள்ளச்சந்தையில் தாராளமாக நடக்கிறது என்று தகவல் வந்ததாம். அதனை நேரிலேயே  பார்த்து விட வேண்டும் என முடிவு கட்டிய அவர் நள்ளிரவில் புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பக்கம் லுங்கி, டீ ஷர்ட் சகிதம் புறப்பட்டாராம். இங்கே சரக்கு எங்கெங்க கிடைக்கும் என்று கேட்க அங்குள்ள கடைக்காரர் அந்த இடத்தின் முகவரியை சொல்ல அங்கே போய் பணம் கொடுத்து குவார்ட்டர் பாட்டிலை வாங்கி வந்தாராம். மறுநாள் காலையில், புதுக்கோட்டை மதுவிலக்கு அமல்பிரிவு அதிகாரியை அழைத்து செம்ம டோஸ் விட்டாராம் எஸ்பி. அதனையடுத்து அங்கு கள்ளச்சந்தை டாஸ்மாக் சரக்கு ஆசாமிகள் கூடாரத்தை காலி செய்து விட்டார்களாம்.