ஆதரவற்றோர்க்கு உணவு வழங்கிய காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார்...

ஆதரவற்றோர்க்கு உணவு வழங்கிய காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார்...

நெல்லையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு உணவு, குடிநீர், முக கவசங்கள்
காவல் உதவி ஆணையர் சதிஷ் குமார் வழங்கினார்.
 
முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் படி மாநகரில்  எவ்வித ஆதரவுமின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்கள் மீட்கப்பட்டு  டவுன் கல்லணை மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு மதிய உணவு, குடிநீர் , முக கவசங்களை காவல் உதவி ஆணையர் சதீஷ்குமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் B. சஜி, மாணவரணி தலைவர் ஜெயராம், முகநூல் நண்பர்கள் குழு தலைவர் டேவிட், ரெட் ஷோன் மாரியப்பன், மக்கள் இயக்க மாணவர் அணி நிர்வாகிகள் ராஜா முத்துராஜ் சுதீஷ் கார்த்திக் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.