காவல் ஆய்வாளர் பிரேமா அவர்களின் குழுவினரால் சைபர் குற்றங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...

காவல் ஆய்வாளர்  பிரேமா அவர்களின் குழுவினரால் சைபர் குற்றங்களை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...

♻️ திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவுப்படியும் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் சைபர் கிரைம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் M. பிரேமா மற்றும் அவர்களின் குழுவினரால்,

♻️இன்று 26.11.2021 ஜோலாரபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 200 மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இணைய வழி மூலமாக நடைபெறும் சைபர் குற்றங்கள் பற்றியும்  ஆன்லைன் விளையாட்டுகள் பற்றியும் அதனால் ஏற்படும் உயிர்சேதம் மற்றும் பண இழப்பு ஆகியவற்றினை பற்றியும் தற்கொலைகள் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் முடிவல்ல என்பது பற்றியும்.

♻️ ஆன்லைன் குற்றங்கள் மற்றும் அதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், பள்ளி மாணவர்கள் மற்றும்  அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்  இணையவழி குற்றங்களை தடுக்கும்  வழிமுறைகள் அடங்கிய  நோட்டீஸ் வழங்கப்பட்டது.

♻️ சைபர் குற்றங்களில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றிய  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

♻️இணையவழி பணமோசடி பற்றிய புகார்களுக்கான கட்டணமில்லா உதவி எண் 155260 ஐ 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொள்ளலாம் மற்றும்,                                                                                                                                                                                          
சைபர் குற்றங்களை பற்றிய புகாரை இணையவழியில்  https://www.cybercrime. பதிவு  செய்யலாம் என்பதை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வடிவேல்...