நாடு முழுவதும் 24 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இதுவரை 6 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 2 கோடி புதிய கழிவறைகளைக் கட்டித்தர அரசு திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு திட்டத்தில் 51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும். கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 4 கோடி கிராமப்புற வீடுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வி தரத்தை மேம்படுத்த 13 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பழங்குடியின பகுதிகளில் நவோதயா பள்ளிகளின் தரத்திற்கு இணையாக மாதிரி பள்ளிகள் திறக்கப்படும். பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி செய்யப்படும்.
குஜராத் மாநிலம் வதோதராவில் ரெயில்வே பல்கலைக்கழகம் திறக்க திட்டம். நாடு முழுவதும் 1.5 லட்சம் சுகாதார மையங்கள் அமைக்கப்படும். பழங்குடியின மாணவர்களுக்கு சரியான கல்வியை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
பாசன வசதியில்லாத 96 மாவட்டங்களுக்கு நிலத்தடி நீர் வசதி ஏற்படுத்தி தர ரூ.2,600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்திற்காக சுகாதாரத்துறைக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு திட்டம்; இத்திட்டத்தில் 50 கோடி பேர் பயன்பெறுவர். ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான இலவச சிகிச்சை பெறுவார்கள். தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
காசநோயாளிகளுக்கு மாதம் ரூ.500 சிகிச்சைக்காக வழங்க ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் திட்டத்தின் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். நாடு முழுவதும் 24 மாவட்ட மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளாக மாற்றப்படும். 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு மருத்துவ கல்லூரி இருப்பது உறுதி செய்யப்படும்


Comments (0)
Facebook Comments (0)