டென்ஷன் ஆன கமிஷனர்
கமிஷனரிடம் வாங்கிக்கட்டிக் கொண்ட ‘தூத்துக்குடி புகழ்’ துணை ஆணையர்!
கடந்த 6ம் தேதியன்று சென்னையின் மத்தியில் உள்ள ஒரு அரசு கல்லூரிக்குள் கத்தியுடன் புகுந்த வாலிபர், அங்கு படித்து வரும் தன்னை காதலிக்க மறுத்த மாணவி ஒருவரை போட்டுத்தள்ளும் முயற்சியில் உள்ளே வேகவேகமாக சென்றாராம். மாணவியிடம் வாய் தகராறில் ஈடுபட்ட அந்த வாலிபர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை மிரட்ட, சுதாரித்துக் கொண்ட சக மாணவர்கள் அந்த வாலிபரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசாரும் விரைந்து வந்தனர். அந்த வாலிபரைப் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மிரண்டு போன அந்த வாலிபர் தன்னை யாரும் எதுவும் செய்து விடக்கூடாது என்று அங்கு இருந்த காக்கியை கரன்சியால் கவனிக்க, அவரும் பல்லை இழித்துக் கொண்டு வாலிபரிடம் எழுதி வாங்கிக் கொண்டு வழக்கு எதுவும் போடாமல் ராஜ மரியாதையுடன் அனுப்பி விட்டார்களாம். அது பற்றி நுண்ணறிவுப்பிரிவுக்கும் எந்த தகவலையும் இன்ஸ் கசியவிடவில்லையாம்.
இது எப்படியோ கமிஷனர் ஏகேவியின் காதுக்கு செல்ல, அவர் கல்லூரிக்குள் கத்தியோடு சென்றவன் மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என்று சம்பந்தப்பட்ட துணை ஆணையரிடம் விசாரிக்க, அப்படியார் சார்? என எதுவுமே தெரியாதது போல விழிக்க டென்ஷன் ஆன கமிஷனர் மைக்கில் டிசியையும், இன்சையும் செம்ம பிடி பிடித்துள்ளார். அதன் பின்னர் அலறியடித்துக் கொண்டு அந்த வாலிபரை தேடிப்பிடித்துக் கொண்டு வந்து கேஸ் போட்டு ரிமாண்டுக்கு அனுப்பினார்களாம். ஒரு துணை ஆணையர் இப்படி இருந்தால் அந்த மாவட்டம் எப்படி கட்டுக்குள் இருக்கும், அலர்ட்டாக இருங்கள் என்று அந்த ‘தூத்துக்குடி பேமஸ்’ துணை ஆணையருக்கு ஒரு துணை ஆணையர் இப்படி இருந்தால் அந்த மாவட்டம் எப்படி கட்டுக்குள் இருக்கும், அலர்ட்டாக இருங்கள் என்று அந்த ‘தூத்துக்குடி பேமஸ்’ துணை ஆணையருக்கு, ஏற்கனவே கேகே நகரில் பெண்கள் கல்லுாரி வாசலில் மாணவி அஸ்வினி தனது காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தை சொல்லி அறிவுரை வழங்கப்பட்டதாம்.


Comments (0)
Facebook Comments (0)