ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டரை கண்டித்த நீதிபதி...

ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டரை கண்டித்த நீதிபதி...

ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டரை கண்டித்த நீதிபதி...

 

        எப்.ஐ.ஆரில் பெயரே இல்லாத ஒருவரை ஆஜர்படுத்தியதால் நீதிபதியிடம் வாங்கிக் கட்டி கொண்ட இன்ஸ்பெக்டர் பாலகுருவின் செயல் ஆண்டிபட்டியில் வைர லாக  பேசப்பட்டு வருகிறது.

       தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.ராஜா. சமூக ஆர்வலரான இவர் பல சமூக பிரச்சனைகளுக்காக  நீதிமன்றங்களில் பல வழக்குகள் போட்டுள்ளார்.

         குறிப்பாக சக்கம்பட்டியில் உள்ள பல கோடி சொத்துக்கள் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஊழல் நடப்பதாகவும், தனியார் சுருட்டியுள்ளதாகவும், மேலும் கடந்த 90 ஆண்டுகளுக்கு முன் விவசாய பயன்பாட்டிற்காக கோதை நாச்சியார் அரசுக்கு வழங்கிய நிலத்தை தற்போது தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், மேலும் குளத்தில் பள்ளிக்கூடம் கட்டியுள்ளதால் பிஞ்சு மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் கூறி ஆண்டிபட்டி மற்றும் மதுரை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மற்றும் கோவில் இடங்களை ஆக்ரமித்துஇந்து மேல்நிலைப் பள்ளி கட்டப்பட்டு உள்ளதாகவும் , பள்ளியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் வழக்கு தொடர்ந்துள்ளார். இவையனைத்தும் நிலுவையில் உள்ளது. எனவே மறைமுகமாக இவருக்கு மிரட்டல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

        இந்நிலையில்   24.7. 2018 அன்று காலை 7 மணியளவில் ஆண்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகுரு சில போலீசாருடன் ஆண்டிபட்டி அருகே எஸ்.எஸ்.புரம் ஜக்கம்மாள் கோவிலில் இருந்த எஸ்.எம்.ராஜாவை கைது செய்து ஸ்டேசனுக்கு அழைத்து வந்துள்ளனர். எதற்காக அழைத்து வந்துள்ளார்கள் என்று கேட்டதற்கு போலீஸ் தரப்பில் சரியான பதில் கூறவில்லை என்றுகூறப்படுகிறது. இந்நிலையில் ஜாதி பிரச்சனையை தூண்டுவதாக சொல்லி எப்.ஐ.ஆர்.போட்டுள்ளதாக கூறி , ஆண்டிபட்டி கோர்ட்டில் அழைத்து சென்று ஆஜர்படுத்தி உள்ளனர்.

        இதனை விசாரணை செய்த நீதியரசர் எஸ்.எம்.ராஜாவை கைது செய்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்றும், மேலும் எப்.ஐ.ஆரில் பெயரே இல்லாத ஒருவரை எப்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தினீர்கள் என்று கூறி, இன்ஸ்பெக்டரை கடுமையாக சாடியுள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து எஸ்.எம்.ராஜாவை விடுவித்துள்ளார். 

         இன்ஸ்பெக்டர் பாலகுரு உள்நோக்கத்துடன் செயல்பட்டாரா? இதன் பின்னனியில் இருப்பவர்கள் யார் என்று ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளது. பகவானுக்கே வெளிச்சம்.