இழந்த பணத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்...
திருச்சி மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் A.சரவணசுந்தர் இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் V.P.கணேசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் P. வாணி, காவல் உதவி ஆய்வாளர்கள் S.மனோஜ், செல்வி. சிவமீனா (Tech) காவலர்கள் சதீஷ்குமார், வேல்முருகன் மற்றும் முத்துசாமி ஆகியோர் இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் 31.05.2022 முதல் 130 ஸ்மார்ட் மொபைல் போன்கள் காணாமல் போனதாக கொடுத்த புகார்களில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான 65 ஸ்மார்ட் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும்,பரிசு பொருள் மோசடி (2), Google advertisement fraud (1), UPI மோசடி (2), போலி இணையதளம் முகவரியில் ஆன்லைன் பர்சேஸ் (1) மூலம் பணத்தை இழந்துள்ளார்கள்.


அவ்வாறு பணத்தை இழந்த ஆறு நபர்களுக்கு (கார் பரிசு மோசடியில் ஒரு நபர் ரூ.6,34,000/- இழந்ததில் வழக்கு பதிவு செய்து எதிரிகளை டெல்லி சென்று கைது செய்து அவர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட ரூ.4,50,000/-ஐ நீதிமன்றம் மூலமாக பெற்றும், Google advertisement fraud-ல் ஒரு நபர் ரூ.35,000/- இழந்ததில் ரூ.30,000/-ஐ கைப்பற்றியும், UPI மோசடியில் இரண்டு நபர்கள் ரூ.43000 இழந்ததில் ரூ.43000/-ஐ கைப்பற்றியும், Online Gift மோசடியில் ஒரு நபர் ரூ.7000/- இழந்ததில் ரூ. 7000/-ஐ கைப்பற்றியும், போலி இணையதள முகவரியில் ஆன்லைன் பர்சேஸ் மோசடியில் ஒரு நபர் ரூ.13500/- இழந்ததில் ரூ. 13500/-ஐ கைப்பற்றியும்) ஆகியோர்கள் இழந்த தொகை ரூ.5,43,500/-ஐ மீட்டு இன்று 28.09.2022-ம் தேதி உரிய நபர்களிடம் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் “1930” என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும்.சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் சிறப்பாக செயல்பட்ட சைபர் கிரைம் காவல்துறையினரை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணி அவர்கள் பெரிதும் பாராட்டினார்.
விஜயகுமார்,பெரம்பலூர்.


Comments (0)
Facebook Comments (0)