போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்திய நெல்லை காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார்...

போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களை ஊக்கப்படுத்திய நெல்லை காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார்...

 

விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்திய நெல்லை
காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார்

 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் லயன்ஸ் சங்கம் , அலங்கார் சினிமாஸ் மற்றும் GMS டிரஸ்ட் சார்பாக நெல்லை மேலப்பாளையத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா மேலப்பாளையம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

நெல்லை மாநகர காவல்  துணை ஆணையர் சுரேஷ்குமார் ( சட்டம் ஒழுங்கு) கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.மேலும் அவர் ஒவ்வொரு இளைஞர்களும் தங்களுடைய லட்சிய கனவுகளை வளர்த்து கொண்டு நீரஜ் சோப்ரா போல எதிர்காலத்தில் பிரகாசிக்க  வேண்டும். இளைஞர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவதையும், கோபங்களையும் தவிர்த்து, எவ்வித வழக்குகளிலும் சிக்கி கொள்ளாமல் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடித்து முன்னேற வேண்டும் என்றும்,விளையாட்டு துறைக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை உங்கள் பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும்  தர வேண்டும்.விளையாட்டு துறையில் முன்னேற துடிக்கும் நெல்லை மாநகர இளைஞர்களுக்கு தேவைப்படும்  எல்லாவித உதவிகளும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

விழாவில் லயன்ஸ் சங்க வட்டார தலைவர் மணிகண்டன், தலைவர் சங்கரவேலு, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மின்னல் சிவா, டாக்டர் வாலிஸ்வரன், GMS பள்ளியின் தாளாளர் கணேசமூர்த்தி, சங்கர், நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அந்தோணி சேவியர் , தலைமை நிருபர்.