மதுரை மாநகர துணை ஆணையர் கார்த்திக் IPS நலிவடைந்த குடும்பங்களுக்கு நல உதவி வழங்கினார்...

மதுரை மாநகர துணை ஆணையர் கார்த்திக் IPS நலிவடைந்த குடும்பங்களுக்கு நல உதவி வழங்கினார்...


மதுரை மாநகர காவல்துறை சார்பாக V2-அவனியாபுரம் காவல் நிலைய சரகம், வில்லாபுரம் புதுநகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த 70 குடும்பங்களுக்கு, அவர்களது இல்லங்களுக்குச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் நிவாரண உதவியாக 10 கிலோ அரிசி, 2 கிலோ பச்சரிசி குருணை, 2 கிலோ துவரம்பருப்பு, ½ லிட்டர் சமையல் எண்ணெய், 4 முட்டைகள் மற்றும் காய்கறிகள் அடங்கிய (சுமார் 800 மதிப்பிலான) பொருட்களை கொடுத்து உதவும் நிகழ்ச்சியை காவல் துணை ஆணையர் சட்டம்  & ஒழுங்கு  கார்த்திக்,IPS.,  அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அனைத்து ஜமாத் பொதுச்செயலாளர் காஜி M.அப்துல் காதர் அவர்களும் மற்றும் V2-அவனியாபுரம் காவல் துறையினரும் பங்கேற்றனர்.