வருமா பதவி உயர்வு! ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்?

வருமா பதவி உயர்வு! ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்?

வருமா பதவி உயர்வு! ஏக்கத்தில் 6 ஏடிஜிபிக்கள்?

 

1986ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரிகளான ஜாபர்சேட், ஸ்ரீலட்சமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா,  தமிழ்செல்வன், ஆஷிஷ்பெங்க்ரா ஆகிய 6 பேரும் தற்போது தமிழக காவல்துறையில் ஏடிஜிபிக்களாக உள்ளனர். தற்போது 6 பேருக்கும் டிஜிபி அந்தஸ்து வந்துவிட்டது. இவர்களுக்கு கீழ் நிலையில் பதவி உயர்வு லிஸ்டில் இருந்த எஸ்பி, டிஐஜி, ஐஜிக்களுக்கு உரிய நேரத்தில் பிரமோஷன் வந்து விட்டது. கடந்த 2016ம் ஆண்டு டிஜிபி அந்தஸ்தை எட்டிய 6 பேருக்கும் இரண்டாண்டுகள் ஆகியும் டிஜிபி பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஐபிஎஸ்கள் வட்டாரத்தில் சர்ச்சையான கருத்தாக வலம் வருகிறதாம். ஆனால் அது தொடர்பான பரிந்துரைகள்  மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தனர்.