திண்டுக்கல்மாவட்ட கிராமம் முழுவதும் டிஜிட்டல் கேமரா...
திண்டுக்கல் முத்தழகு பட்டியல் டிஜிட்டல் இந்தியா திட்ட துவக்கமாகவும் குற்ற சம்பவத்தை குறைப்பதற்காகவும் கிராமம் முழுவதும் டிஜிட்டல் கேமரா...
திண்டுக்கல் முத்தழகு பட்டியல் 3200 குடும்பங்கள் உள்ளன இங்கு பாரத பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதல் கட்டமாகவும் முத்தழகு பட்டியில் முன்பகை காரணமாக அடிக்கடி பல கொலைகள் நடைபெறுவதால் இதனை தடுக்கும் வகையில் முத்தழகுபட்டி இளைஞர் அமைப்பு சார்பில் கிராமத்தில் உள்ள இரண்டு பிரதான வீதிகள் மற்றும் ஏழு சின்ன விதிகளில் ரூ 7 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் செலவில் 15 இடங்களில் 29 டிஜிட்டல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது இங்குள்ள கேமராக்கள் அனைத்தும் திண்டுக்கல் காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முதல் தொடக்கமாக நவீன முறையில் ஊர் முழுக்க கண்காணிக்கும் பணியில் இளைஞர்கள் மேற்கொண்டுள்ளனர் இதன் மூலம் கிராமங்களில் கொலை சம்பவங்கள் தடுக்கப்படும் தமிழகத்திலேயே முதல்முறையாக முத்தழகு பட்டியல்தான் கேமரா மூலம் கிராமம் முழுவதும் கண்காணிக்கப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இன்று 05.08.18 மாலை முத்தழகு பட்டியில் நடைபெற்ற விழாவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் கலந்துகொண்டு கேமராக்களை இயக்கி வைத்தார்


Comments (0)
Facebook Comments (0)